வீடு கட்ட கடன் பெறுவது எப்படி ?
"வீட்டைக் கட்டிப்பார்,கல்யாணம் பண்ணிப்பார்" என்பது பழமொழி.நடுத்தர மக்களின் கனவுகளில் ஒன்று .கல்யாணம் கூட ஈசியாக பண்ணிடலாம்.ஆனா வீடு கட்டுவது இருக்கே அதுவும் பாங்க்ல கடன் வாங்கி கட்றது இருக்கே, நல்ல பொறுமை வேண்டும் .பல பேங்க்குகள் உடனே கடன் தருவதில்லை,நாம் அவர்களிடம் பல ஆவணங்களை சமர்ப்பித்து பிறகுதான் கடன் கொடுப்பார்கள் (குறைந்தது 3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம் ). அதற்கான ஆவணங்களைப் பார்ப்போம் .
இவைகளை பார்வையிட்டு வக்கீலிடம் legal opinion வாங்கிய பிறகுதான் வீடு கட்டும் இடத்தை பார்க்க வருவார்கள் .அதன் பிறகு பேங்க்கின் applicationயே நிரப்ப சொல்வார்கள் .அதில் உங்களுக்கு வேறு சொத்துக்கள் ,(நகரும் ,நகராத )நகைகள் அனைத்தும் குறித்துக்கொள்வார்கள் ,பிறகு நம் விண்ணப்பத்தையும் ,மேலே குறிப்பிட்ட சான்றுகளின் நகல்களையும் சேர்த்து மாவட்ட கிளைக்கு அனுப்பி ,அவர்களின் அனுமதிக்குப் பிறகே கடன் கிடைக்கும் (நாம் கேட்ட தொகையில் 20% குறைவாக ).
பின்னர் அந்தத் தொகையை அஸ்திவாரமத்திற்கு ஒரு பகுதியையும் ,நிலமட்டத்திற்கு ஒரு பகுதியையும் ,கான்கிரிட் தளத்திற்கு ஒரு பகுதியையும் மொத்தம் 3 அல்லது 4 தவணைகளில் கொடுப்பார்கள் .ஒவ்வொரு நிலையிலும் கட்டுமான பணிகளை போட்டோ எடுத்து கொடுக்க வேண்டும் . எனவே நாம் கடன் வாங்கும் முன் கொஞ்சம் அதாவது குறைந்தது 20% நாம் கையில் வைத்திருக்க வேண்டும் .
எந்த வங்கிகளில் வாங்கலாம் ?
கடன் அனுமதி கடிதம் கிடைத்தவுடன் நம் அசல் ஆவணங்களை பேங்க்கில் வைத்துக்கொள்வார்கள் .முதல் வருடம் வட்டி பொதுவாக குறைந்தே இருக்கும் .பிறகு RBI வட்டி படியும் அல்லது fixed வட்டி படியும் திரும்ப் தவணையை செலுத்தலாம் .இது தவிர வீட்டு பத்திரத்தில் வில்லங்கம் இருப்பின் அதை சரி செய்து கொடுக்க அவர்கள் கேட்கும் சான்றுகளை நாம் கொடுக்க வேண்டும் .(வாரிசு சான்று ,நோட்டரி வக்கீல் அபிடவிட் சான்று போன்றவை ).
இவை எல்லாம் சுருக்கமானவை ஆனாலும் பேங்க் செல்லும் முன் உங்களுக்கு கட்டாயம் பயன்படக்ககூடியவை.பலவித பேங்க்குகளில் பலவிதமாக நடைமுறைகள் இருக்கலாம் .நீங்கள் தீர விசாரித்து அறிந்து கொள்ளுங்கள் .
வாழ்த்துக்களுடன் ....

தேவையான ஆவணங்கள்
* மனை இடம் மூலப்பத்திரம் + வில்லங்கசான்று
* பத்திரம் யார் பெயரில் உள்ளதோ (கடன் வாங்குகிறவர் ) அவரின் அடையாள சான்று .
* வங்கி பாஸ் புத்தகம் (ஜாமீன்தாரர்+ கடன் வாங்குகிறவர்)
* மனை இடம் approval (பஞ்சாயத்து (அ) நகராட்சி )
* வீட்டின் பிளான் + engineer கொட்டேஷன்
* (அரசு )ஊழியராக இருந்தால் ஊதியசான்று + வருமான வரி படிவம் 16(form 16)
இவை எல்லாம் கொடுக்க வேண்டும் .
இவைகளை பார்வையிட்டு வக்கீலிடம் legal opinion வாங்கிய பிறகுதான் வீடு கட்டும் இடத்தை பார்க்க வருவார்கள் .அதன் பிறகு பேங்க்கின் applicationயே நிரப்ப சொல்வார்கள் .அதில் உங்களுக்கு வேறு சொத்துக்கள் ,(நகரும் ,நகராத )நகைகள் அனைத்தும் குறித்துக்கொள்வார்கள் ,பிறகு நம் விண்ணப்பத்தையும் ,மேலே குறிப்பிட்ட சான்றுகளின் நகல்களையும் சேர்த்து மாவட்ட கிளைக்கு அனுப்பி ,அவர்களின் அனுமதிக்குப் பிறகே கடன் கிடைக்கும் (நாம் கேட்ட தொகையில் 20% குறைவாக ).
பின்னர் அந்தத் தொகையை அஸ்திவாரமத்திற்கு ஒரு பகுதியையும் ,நிலமட்டத்திற்கு ஒரு பகுதியையும் ,கான்கிரிட் தளத்திற்கு ஒரு பகுதியையும் மொத்தம் 3 அல்லது 4 தவணைகளில் கொடுப்பார்கள் .ஒவ்வொரு நிலையிலும் கட்டுமான பணிகளை போட்டோ எடுத்து கொடுக்க வேண்டும் . எனவே நாம் கடன் வாங்கும் முன் கொஞ்சம் அதாவது குறைந்தது 20% நாம் கையில் வைத்திருக்க வேண்டும் .
எந்த வங்கிகளில் வாங்கலாம் ?
தேசிய மயமாக்கப்பட்ட பேங்க்குகளில்
வாங்கலாம் .தனியார் பாங்க்குகள் மறை முக கட்டணங்கள் இருக்கலாம் .LIC HFL
போன்றவற்றில் ஏஜன்ட் கமிசன் ,processing fees அதிகம் என நண்பர் கூறினார்
.SBI பரவாயில்லை என்றார் .
கடன் அனுமதி கடிதம் கிடைத்தவுடன் நம் அசல் ஆவணங்களை பேங்க்கில் வைத்துக்கொள்வார்கள் .முதல் வருடம் வட்டி பொதுவாக குறைந்தே இருக்கும் .பிறகு RBI வட்டி படியும் அல்லது fixed வட்டி படியும் திரும்ப் தவணையை செலுத்தலாம் .இது தவிர வீட்டு பத்திரத்தில் வில்லங்கம் இருப்பின் அதை சரி செய்து கொடுக்க அவர்கள் கேட்கும் சான்றுகளை நாம் கொடுக்க வேண்டும் .(வாரிசு சான்று ,நோட்டரி வக்கீல் அபிடவிட் சான்று போன்றவை ).
இவை எல்லாம் சுருக்கமானவை ஆனாலும் பேங்க் செல்லும் முன் உங்களுக்கு கட்டாயம் பயன்படக்ககூடியவை.பலவித பேங்க்குகளில் பலவிதமாக நடைமுறைகள் இருக்கலாம் .நீங்கள் தீர விசாரித்து அறிந்து கொள்ளுங்கள் .
வாழ்த்துக்களுடன் ....
I just couldn't leave your website before telling you that I truly enjoyed the top quality info you present to your visitors? Will be back again frequently to check up on new posts.
ReplyDeletesingapore refinancing home loan
I like this post,And I guess that they having fun to read this post,they shall take a good site to make a information,thanks for sharing it to me. click this link here now
ReplyDelete