Saturday, 1 September 2012

GURUVAREDDIYUR G.G.GURUMOORTHY IYYA - கொடைவள்ளல் ஜி .ஜி . குருமூர்த்தி அய்யா

கொடைவள்ளல் ஜி .ஜி . குருமூர்த்தி அய்யா


குருவரெட்டியூர் என்றாலே நினைவிற்கு வருவது   ஜி .ஜி . குருமூர்த்தி அய்யா தான்.
நம் உலகில் எத்தனையோ பேர் பிறப்பர்,இறப்பர். அது முக்கியமில்லை ,
எவர்
றந்துமே இருப்பர், அதுதான் முக்கியம் .
அப்படிப்பட்ட மனித தெய்வங்களை யாரும் மறப்பதில்லை .


காட்சிக்கு எளியவர் ,
எம்.எல்.ஏ ஆனாலும் பேருந்தில் மட்டும் பயணம் செய்தவர் ,கடைசி காலம் வரை ஓலை குடிசையில் வாழ்ந்தவர் , தன் உடமைகளை தானே துவைத்துக் கொண்டவர் .


அவரைப் பற்றிய சிறு குறிப்பு .
பெயர்  ;ஜி.ஜி.குருமூர்த்தி
செல்ல பெயர் :பண்ணாடி(மக்களால் அன்புடன் )
பெற்றோர் ; தாயம்மாள்-ஜி.ஆர்.குருசாமி ரெட்டியார்
பிறப்பு :22 .12 .1921
திருமணம் :1940
மனைவி :பாப்பம்மாள் (எ)அக்கம்மா
ள்,
குழந்தைகள் :ஆண் 4 ,பெண் 2
அரசியல் ஆசான் :பெருந்தலைவர்  காமராசர்,
தெய்வப் பதவி :26 .06 .2011


வகித்த பதவிகள் :

1 . 1950 -51 கிராம  மணியகாரர்,
2 .1954 -1970 வரை குருவரெட்டியூர் பஞ்சாயத்து  தலைவர் ,
3 .1957 -பவானி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.மேட்டூர் அணை வடகரை ,தென் கரை பாசன வசதியை ஏற்படுத்தியவர் ,

4 .1965 -மே மாதம் அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் ,
 5 . குருவரெட்டியூர் ,நெசவாளர் கூட்டுறவு 20 ஆண்டுகள்   சங்க தலைவர் ,
6 .மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் சொத்து பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் ,
7 .1989 ல்  பவானி தொகுதி சுயேச்சை  எம்.எல்.ஏ,
8 .தமிழ்நாடு மாநில சமாஜ் வாதி ஜனதா தள தலைவர் (முன்னாள் பிரதமர் சந்திரசேக
ர் காலத்தில்)
9 .சக்தி சுகர்ஸ் இயக்குனர் .


செய்த சேவைகள் :(நிறைய -அவற்றில் சில )

1 .1938 ல் ஊ .ஒ .து.பள்ளிக்கு இடமும் கட்டிடமும் இலவசமாக தந்தார் ,
2 .1951 ல் உயர் நிலை
பள்ளிக்கு இடமும் கட்டிடமும் இலவசமாக தந்தார் ,
3 .1953 ல் மேல் நிலை பள்ளியாக்கி
இடமும் கட்டிடமும் இலவசமாக தந்தார் ,
4 . குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையம் ,தொடக்க வேளாண்மை சங்கம் ,நூலகம் இவை யாவும் அவர் கொடுத்த   நிலமே .


   அதுமட்டுமல்லாமல் அவரது குடும்பத்தார்  .ஊ .ஒ .து.பள்ளிக்கு நூற்றாண்டு விழாவிற்கு நினைவு வளைவு ஏற்படுத்தி
வாழையடி 
வாழையாக அவர் வழியில் செல்கின்றார்கள் .


குருவரெட்டியூர் இருக்கும்வரை அவரின் புகழ்
இருக்கும்.

ஒரு இனிமையான செய்தி :

 நம் தெய்வத் திரு ஜி.ஜி.அய்யா அவர்களுக்கு விரைவில்  குருவரெட்டியூரில் சிலை வைக்கப்போவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment