விவசாயிகளே நண்பர்களே மாத்தி யோசிங்க
இதுவரை ஏமாந்ததே போதும் ஈமு, நாட்டுக்கோழி, ஆடு, கொப்பரைத் தேங்காய் இப்ப லேட்டஸ்ட் ஆக அகர் மரம் .இதுல பணம் போட்டு அவன் ஏமாத்திட்டான் என்று ஏமாறவேண்டாம்.ரூ.100000 க்கு மாதம் ரூ 8000 வந்தா கூட 10 மாசத்துல கோழி செட்டுக்கு ரூ 20000 ஆக நாம போட பணம் ஒரு வருசத்துதல வந்துடும்,பிறகு போனஸ் + பிறகு நமக்கு லாபம் என நினைத்து பணம் போட்டோம் ஏமாத்திட்டான் .
இதையே நாம் கொஞ்சம் மாற்றி யோசித்து நம் வீட்டில் நாமே செட் அமைத்து சுமார் 10 கோழிகள், 5 ஆடுகள் வாங்கி அதை பராமரித்தல் நமக்கும் லாபம் கண்டிப்பாக வரும்.செட்டின் கீழ் தளம் காரை போட்டு,ஒரு பக்கம் தாழ்வாக இருந்தால் ஆட்டு மலம்,சிறுநீர் போன்றவை கழுவும்போது அது தொட்டியில் சேகரிக்கப்பட்டு வயலுக்கு நீர் பாய்ச்சும் போது கலந்து உரமாக பாய்ச்சலாம்.
ஆடுகளுக்கு தீவனம் நம் தோட்டத்தில் பயிரிட்டு அதை தொட்டி போன்ற அமைப்பில் (plastic canes கூட இருக்கலாம்),சிறு துண்டுகளாக நறுக்கி உணவளிக்கலாம்.இது வருடம் குறைந்தபட்சம் சுமார் ரூ 70000 பெறலாம்.இதை நான் நேரில் பார்த்தேன்.
அது
சரி மேடுக்காடாக இருந்தால் என்ன செய்வது? சீசன்க்கு தகுந்தாற்போல் விவசாய
பொருள்களை வாங்கி விற்கலாம்,உதாரணமாக மஞ்சள்,பருத்தி ,.மேலும் பசுமை விகடன்
போன்ற இதழ்களை வாங்கி படிக்கணும் . இதுவரை நாம் இருந்தது விவசாயியாக
,இனிமேல் வியாபாரியாகவும் இருப்போம்.
No comments:
Post a Comment