ஆசியாவிலேயே மிகப்பெரிய நந்தி
அந்த நந்திக்குப் பின்னால் ஒரு அருமையான கதை
தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்காக ஒரு சிற்பி நியமிக்கப்பட்டாராம் (அவரின் பெயர் நினைவில்லை )அவர் நந்தியை அமைப்பதற்காக ஒரு பெரிய பாறையை எடுத்து வந்தனராம். வரும் வழியில் காவிரி ஆற்றைக் கடக்கும் போது சிற்பியின் மகன் அந்தப் பாறையின் மேல் ஆற்று நீரை ஊற்றி (பாறையின் வெப்பத்தை தவிர்க்க ) வந்தாராம் .பாறையின் ஒரு இடம் மட்டும் ஈரம் காயவில்லையாம் .
கரையைத் தொட்டதும் உடனே தன் தந்தையை நோக்கி "அப்பா இந்த பாறையிலா நந்தியை செதுக்குவது " என்றான் .அதற்கு அவரோ "ஆமாம்" என்றார் .அப்பா "இப்பாறையில் தேரை (ஒருவகை தவளையினம் ) உள்ளது, எனவே இது ஆகாது" என்றான் .அதற்கு அவரோ "அடேய் மகனே,நான் பார்த்து எடுத்து வந்த பாறையடா ,எனக்கே நீ புத்தி சொல்ல வருகிறாயா ? என்றார் கோபத்துடன் .அதற்கு அவனோ "என் அப்பா மிகப்பெரிய சிற்பியாக இருக்கிறார் என்றால் அது எனக்குப் பெருமை ,அதே சமயத்தில் என் தந்தை தவறு செய்துவிட்டார் என்றால் அது எனக்கும் மிகப்பெரிய அவமானம் "என்றான் சற்றும் சளைக்காமல் .
" முடிவாக என்ன சொல்கிறாய்" என்றார் சிற்பி.மகனோ "பாறையை மாற்றுங்கள்"அதற்கு அவரோ "சரி,நீ சொல்வது போல் தேரை இருந்தால் நான் ,உன் சொல்லுக்கு கட்டுப்படுவேன் ,அதே போல் தேரை இல்லை என்றால் நீ என் சொல்லுக்குக் கீழ்படிய வேண்டும் " என்றார் ."அப்படியே செய்கிறேன் அப்பா "என்றான் மகன்.அந்தப் பாறை சிற்பியின் மகன் சொன்ன இடத்தில் உளியில் தட்டப்பட்டது.பாறைத் துணுக்கு சிதறியவுடன் உள்ளிருந்து ஒரு சிறிய தேரை குதித்து வெளியே வந்தது .
அதைப் பார்த்த சிற்பி தன் மகனிடமே தோற்றோமே என்று வருந்தினாராம்,அதற்கு மகனோ "அப்பா,அப்பாறையை நந்தியாக செதுக்கினால் ஒரு நாள் அப்பாறையில் வெடிப்பு ஏற்படும்,அது உங்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்ப்பட்டிருக்கும்,அது என்னால் தடுக்கப்பட்டது,இது தவறா அப்பா? என்றான்.பிறகு சிற்பி தன் மகனை அணைத்து "என் மகன் என்னைக் காத்தான் " என்று கூறி "சரி, சரி, நான் போட்டியில் தோற்றுவிட்டேன்,நீ என்ன சொல்கிறாயோ அதன் படி நடப்பேன் இது சத்தியம்"என்றார் .
"அப்பா ,இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை நாம் கட்டுவதற்கு வாய்ப்பு கொடுத்த நம் மாமன்னர் இராஜ ராஜ சோழருக்கு நன்றி கடனாகவும், எனக்காகவும் நீங்கள் இக்கோவிலை கட்டுவதற்கு ஒரு வராகன் கூட வாங்கக் கூடாது ,இது தான் நான் உங்களிடம் கேட்கும் என் வெற்றிப் பரிசு "அதற்கு அவரோ தன மகனைக் கட்டி அணைத்து ,"மகனே ,நீ நீடுழி வாழ்க ,உன்னைப் பெற்றதற்கு நான் பெருந்தவம் செய்திருக்கவேண்டும் ,நீ சொன்னபடி ஒரு வராகன் கூட வாங்க மாட்டேன் இது சத்தியம்" .என்றார் ,அப்படி கட்டின கோவில் இக்கோவில் ,அது மட்டும் அல்ல பல விந்தைகளை உள்ளடக்கிய கோவில்.
அது சரி எங்கே அந்த உடைத்த பாறை (தேரை இருந்த) அது இன்னமும் தஞ்சைக்கு 5 அல்லது 6 km முன் சாலையோரம் இருக்கிறதாம் .
தஞ்சை கோவிலைப் பார்க்கும் போது மாமன்னர் இராஜ ராஜ சோழர் மட்டுமல்ல ,அந்த சிற்பியும் அவரது மகனும் நினைவுக்கு வருவார்கள் .